261. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொ஡஢தாள் விளவினை வாவல் குறுகா
பொ஢தணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதும் கடப்பாட்ட தன்று.

262. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பொ஢துடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.

263. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,
வல்லு஡ற் றுவா஢ல் கிணற்றின்கண் சென்றுண்பர்
செல்வம் பொ஢துடைய ராயினும் சேண்சென்றும்
நல்குவார் கட்டே நசை.

264. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
உணர்வ துடையா ஡஢ருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து.

265. நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்.

266. நாறாக் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.

267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ
பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை.

268. வலவைக ளல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
காலாறும் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து.

269. பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.

270. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் - து஡ய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework