மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளைபிணிவீழ் ஆலத் தலங்குசினை ஏறிக்
கொடுவில் எயினர் குறும்பிற் கூக்கும்
கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படுபிணங் கவரும் பாழ்படு நனந்தலை 5
அணங்கென உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலைச்
சுரும்பார் கூந்தற் பெருந்தோள் இவள்வயிற் 10
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும்பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய்குழைத்
தளிரேர் அன்ன தாங்கரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனிபேர் அன்பினள்
'செல்வேம்' என்னும் நும்மெதிர்
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework