நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்கோடுகடைந் தன்ன கொள்ளை வான்பூ
ஆடுபரந் தன்ன ஈனல் எண்கின்
சேடுசினை உரீஇ உண்ட மிச்சில்
பைங்குழை தழையர் பழையர் மகளிர் 5
கண்திரள் நீள்அமைக் கடிப்பிற் றொகுத்து
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பலபிறக் கெரழியச்
சென்றோர் அன்பிலர்- தோழி!- என்றும்
அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப் 10
பாணர் ஆர்ப்பப் பல்கலம் உதவி
நாளவை இருந்த நனைமகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework