ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும்
கானல்அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப! 5
மலர்ஏர் உண்கண்எம் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்கநீ அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்புஅமர் எக்கர் அம்சிறை உளரும்
தடவுநிலைப் புன்னைத் தாதுஅணி பெருந்துறை 10
நடுங்குஅயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டற் பாவை சிதைய வந்துநீ
தோள்புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ கடல்அறி கரியே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework