விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்தெரிஇதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்,
அம்சிலை இடவதுஆக, வெஞ் செலற்
கணைவலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி;
வருதல் வாய்வது வான்தோய் வெற்பன், 5
வந்தனன் ஆயின், அம்தளிர்ச் செயலைத்
தாழ்வுஇல் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்புஉடன்
ஆடா மையின் கலுழ்புஇல தேறி,
நீடுஇதழ் தலயிய கவின்பெறு நீலம் 10
கண்என மலர்ந்த சுனையும், வண்பறை
மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
குலவுப்பொறை யிறுத்த கோல்தலை மருவி
கொய்துஒழி புனமும், நோக்கி; நெடிதுநினைந்து,
பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ.தேங்கு - 15
'அவ்வெள் அருவிசூடிய உயர்வரைக்
கூஉம் கணஃது எம்ஊர், என
ஆங்குஅதை அறிவுறல் மறந்திசின், யானே,

Add a comment

ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்துஉள்ளியும் அறிதிரோ, எம்?" என, யாழநின்
முள்எயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல ; நின்
ஆய்நலம் மறப்பெனோ மற்றே? சேண்இகந்து 5
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
முளிபுன் மீமிசை வளிசுழற் றுறாஅக்
காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
அதர்கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு 10
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
இனம்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு,
ஞான்று தோன்று அவிர்சுடர் மான்றால் பட்டெனக்,
கள்படர்ஓதி! நிற்படர்ந்து உள்ளி,
அருஞ்செலவு ஆற்றா ஆர்இடை, ஞெரேரெனப் 15
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென,
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு,
'இன்னகை! இனையம் ஆகவும், எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழநின் 20
கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி,
நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங்கை காட்டிய வாய்அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின், புலத்தியால் எம்மே!

Add a comment

வைகுபுலர் விடியல், மைபுலம் பரப்பக்,கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப,
நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, . 5
அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக்
கோழிணர் எதிரிய மரத்த கவினிக்,
காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம்பிரி புலம்பின் நலம் செலச் சாஅய் 10
நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த
நல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ-
மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
அம்கலுழ் மாமை கிளஇய,
நுண்பல் தித்தி, மாஅ யோளோ?

Add a comment

கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப,நீல்நிறப் பெருங்கடல் பாடுஎழுந்து ஒலிப்ப
மீன்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
குவைஇரும் புன்னைக் குடம்பை சேர,
அசைவண்டு ஆர்க்கும் அல்குறு காலைத், 5
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
துயரம் செய்துநம் அருளார் ஆயினும்-
அறா அ லியரோ அவருடைக் கேண்மை! 10
அளிஇன் மையின் அவண்உறை முனைஇ,
வாரற்க தில்ல - தோழி! - கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை 15
அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே!

Add a comment

மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்கொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
தளிர்ஏர் மேனி, மாஅ யோயே!
நாடுவறம் கூர, நாஞ்சில துஞ்சக் 5
கோடை நீடிய பைதுஅறு காலைக்
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்,
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை, 10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்று - சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே!

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework