இனிப்பிறி துண்டோ ? அஞ்சல் ஓம்பென!'அணிக்கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறுநினைந்து அல்கலும்
குளித்துப்பொரு கயலிற் கண்பனி மல்க
ஐய வாக வெய்ய உயிரா 5
இரவும் எல்லையும் படரட வருந்தி
அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்பத்
தம்மல தில்லா நம்மிவண் ஒழியப்
பொருள்புரிந்து அகன்றன ராயினும் அருள்புரிந்து
வருவர்- வாழி, தோழி!- பெரிய 10
நிதியஞ் சொரிந்த நீவி போலப்
பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை
நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி
ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல 15
இல்வழிப் படூஉங் காக்கைக்
கல்லுயர் பிறங்கல் மலைஇறந் தோரே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework