நீலத் தன்ன நீர்பொதி கருவின்மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
நிலம்தண் ணென்று கானங் குழைப்ப
இனந்தேர் உழவர் இன்குரல் இயம்ப
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின் 5
திரிமருப் பிரலை பைம்பயிர் உகள
ஆர்பெயல் உதவிய கார்செய் காலை
நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
கல்லெனக் கறங்குமணி இயம்ப வல்லோன்
வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர் 10
ஈர்ம்புறவு இயங்குவழி அறுப்பத் தீந்தொடைப்
பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரார் ஆயின் தந்நிலை
எவன்கொல்? பாண! உரைத்திசிற் சிறிதெனக்
கடவுட் கற்பின் மடவோள் கூறச் 15
செய்வினை அழிந்த மையல் நெஞ்சில்
துனிகொள் பருவரல் தீர வந்தோய்!
இனிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி!
வேலி சுற்றிய வால்வீ முல்லைப்
பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின் 20
இன்னகை இளையோள் கவவ
மன்னுக பெரும! நின் மலர்ந்த மார்பே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework