நெஞ்சுடன் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கிஇரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரையக் கருதும் ஆயின் பெரிதுவந்து
ஓங்குவரை இழிதரும் வீங்குபெயல் நீத்தம்
காந்தளஞ் சிறுகுடிக் கௌவை பேணாது 5
அரிமதர் மழைக்கண் சிவப்ப நாளைப்
பெருமலை நாடன் மார்புபுணை யாக
ஆடுகம் வம்மோ- காதலம் தோழி!
வேய்பயில் அடுக்கம் புதையக் கால்வீழ்த்து
இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார் 10
ஓடுபுறம் கண்ட தாள்தோய் தடக்கை
வெல்போர் வழுதி செல்சமத் துயர்த்த
அடுபுகழ் எஃகம் போலக்
கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework