கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன.
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப்பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி, யாம் உலமர
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
விளையாட்டிக் கொண்டு வரற்கு எனச் சென்றாய்,
உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம்
நீட்டித்த காரணம் என்?
கேட்டீ -
பெரு மடல் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்
குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கித், தளரும்
பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண்,
அகல் நகர் மீள்தருவான் ஆகப், புரி ஞெகிழ்பு
நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்,
சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி
ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்
கால்கோள்' என்று ஊக்கிக், கதுமென நோக்கித்,
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்
'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு,
ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்
செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்!
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த
புலம்பு எலாம் தீர்க்குவேம்மன், என்று இரங்குபு,
வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத
கள்வனால் தங்கியது, அல்லால், கதியாதி,
ஒள் இழாய்! யான் தீது இலேன்;
எள்ளலான், அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
எம் இல் வருதியோ? எல்லா! நீ; தன் மெய்க் கண்
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,
முந்தை இருந்து மகன் செய்த நோய்த் தலை,
'வெந்த புண் வேல் எறிந்தற்றால்' வடுவொடு
தந்தையும் வந்து நிலை.
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்நறு வடி ஆர் இற்றவை போல் அழியக்,
கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்,
சுரந்த என் மெல் முலைப் பால் பழுது ஆக - நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா!
கடவுள் கடி நகர் தோறும் இவனை
வலம் கொளீஇ வா' எனச், சென்றாய், விலங்கினை
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை? கூறு;
நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போது போல் கொண்ட
குடை நிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ
'இவன் மன்ற, யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா
மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர்
தம் தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,
ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார்; 'பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வான் ஆம், இ·து ஒத்தன்; சீத்தை!
செறு தக்கான் மன்ற பெரிது';
சிறு பட்டி! ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ? யாம் காண்கு;
அவற்றுள், நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்;
குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்
பொறி ஒற்றிக் கொண்டு ஆள்வல்' என்பது தன்னை
அறீஇய செய்த வினை;
அன்னையோ? இ·து ஒன்று;
முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்
வெந்த புண் வேல் எறிந்தற்றா, இ·து ஒன்று;
தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக் கண்
தந்தார் யார், எல்லாஅ! இது?
இ·து ஒன்று, என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி, தந்தாளா? நின்னை,
இது தொடுக என்றவர் யார்?
அஞ்சாதி; நீயும் தவறு இலை; நின் கை இது தந்த
பூ எழில் உண் கண் அவளும் தவறு இலள்!
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?
மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள் -
தான் யாரோ? என்று வினவிய, நோய்ப்பாலேன்
யானே தவறு உடையேன்!
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
அகல் துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்தபகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல,
வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!
'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல் வழித்,
'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் -
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,
'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் -
அலமரல் உண் கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?
என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல் வழி,
முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் -
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ளக்,
கரை இடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்?
என ஆங்கு,
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
தண்டாப் பரத்தை தலைக் கொள்ள, நாளும்
புலத் தகைப் பெண்டிரைத் தேற்ற; மற்று யாம் எனின்,
தோலாமோ நின் பொய் மருண்டு?
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
காலவை சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடுபொடி அழல் புறம் தந்த செய்வுறு கிண்கிணி;
உடுத்தவை கைவினைப் பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல்
மை இல் செந் துகிர்க் கோவை அவற்றின் மேல்
தைஇய பூந் துகில் ஐது கழல் ஒரு திரை
கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி;
பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி ஈர் இடைத் தாழ்ந்த
பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்;
சூடின, இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மூக் காழ் மேல்
சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூல் ஆக
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாணச்
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை;
ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின்
செல்வு உறு திண் தேர் கொடும் சினை கைப் பற்றிப்
பைபயத் தூங்கும் நின் மெல் விரல் சீறடி
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ
செம்மால் நின் பால் உண்ணிய;
பொய் போர்த்துப், பாண் தலை இட்ட பல வல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கித் தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்
நுந்தை பால் உண்டி சில;
நுந்தை வாய், மாயச் சூள் தேறி மயங்கு நோய் கைமிகப்
பூ எழில் உண் கண் பனி பரப்பக் கண் படா
ஞாயர் பால் உண்டி சில;
அன்னையோ, யாம் எம் மகனைப் பாராட்ட கதுமெனத்
தாம் வந்தார் தம் பால் அவரொடு தம்மை
வருக என்றார் யார் கொல்லோ ஈங்கு;
என் பாலல், பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என்
பாராட்டைப் பாலோ சில;
செரு குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்
வரிசைப் பெரு பாட்டொடு எல்லாம் பருகீத்தை
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்தநெய்தல் தாது அமர்ந்து ஆடிப், பாசடைச் சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,
மை தபு, கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம்,
கொய்குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர!
'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி,
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்;
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை
கண்டுநின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்.
முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்துப்,
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;
என ஆங்கு;
'கிண்கிணி மணித் தாரொடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப்
பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என,
ஊரவர் உடன் நகத் திரிதரும்
தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே!