கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன.

அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான், நயம் செய்யான்வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய
இருள் தூர்பு, புலம்பு ஊரக், கனை சுடர் கல் சேர -
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று, புறம் மாறிக்
கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம் இலை கூம்பத் -
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக,
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலைக்,
கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!
மாலை நீ - உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின் கண்
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்,
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ?
மாலை நீ - ஈரம் இல் காதலர் இகந்து, அருளா இடன் நோக்கிப்
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்,
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ?
மாலை நீ - கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின் கண்
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்,
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ?
என ஆங்கு;
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை
துனி கொள் துயர் தீர காதலர் துனை தர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஓம்பும்
நல் இறை தோன்றக், கெட்டாங்கு -
இல்லாகின்றால் இருள் அகத்து ஒளித்தே.

Add a comment

வாரி நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்தஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ...
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரை கண்டு, 'மதி அறியா
ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ -
தோழி! - அவன் உழைச் சென்று
சென்று யான் அறிவேன்; கூறுக. மற்று இனி.
'சொல் அறியாப் பேதை - மடவை! - மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
நினக்கு வருவதாக் காண்பாய். அனைத்து ஆகச்
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு.
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய -
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ... அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?

Add a comment

தோழி! நாம் காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூரநாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்
கரந்ததூஉம் கையொடு கோள் பட்டாம், கண்டாய்; நம்
புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ.
அதனை வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள்;
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப்புறங்கடை போயினாள். யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூம் கரை நீலம் தழீஇத், தளர்பு ஒல்கிப்,
பாங்கரும் கானத்து ஒளித்தேன். - அதற்கு, எல்லா
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் - அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும்
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை. அகல் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம்
அல்கலும் சூழ்ந்த வினை!

Add a comment

நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்அலமரல் அமர் உண் கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்.
பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
யார் - எல்லா! நின்னை அறிந்ததூ உம் இல் வழி?
தளிர் இயால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல் இனத்து ஆயர் மகனேன், மற்று யான்.
ஒக்கும் மன்;
புல் இனத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
நல் இனத்து ஆயர், எமர்.
எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லை மன்;
ஏதம் அன்று எல்லை வருவான் விடு.
விடேன்,
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு.
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன்? - மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்?
'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார்
பொய்ம் மொழி தேறுவது என்?
தெளிந்தேன், தெரி இழாய்! யான்.
பல் கால், யாம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில்,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று
உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்
நல் ஏறு நாகு உடன் நின்றன,
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே.

Add a comment

பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம்தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ
என்னையே முற்றாய் விடு.
விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில்
நீங்கிச் சினவுவாய் மற்று.
நீ நீங்கு, கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு;
யாய் வருக ஒன்றோ, பிறர் வருக; மற்று நின்
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்க பெறின்.
நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! -
கலத்தொடு யாம் செல்வுழி நாடிப், புலத்தும்
வருவையால் - நாண் இலி! நீ.

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework