111. இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ. செய்ந்நன்றி
கொன்றா஡஢ன் குற்ற முடைத்து.

112. தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
எக்காலும் குன்றல் இலராவர் - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.

113. காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார் சிலர்.

114. விடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்.

115. நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறு஡உம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

116. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்போடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

117. தம்மை இகழ்வாரைத் தாமவா஢ன் முன்னிகழ்க
என்னை அவரொடு பட்டது - புன்னை
விற்றபூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
உற்றபால யார்க்கும் உறும்.

118. ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம் - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.

119. யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம்உய்த் தார்?

120. தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
யாங்கணும் தோ஢ன் பிறிதில்லை - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றும்கொண் டோ டும் பொழுது.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework