கற்புடை மகளிர்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
381. அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பா ன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
382. குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதும்
கடனீ ரறவுண்ணும் கேளிர் வானும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.
383. நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோனும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.
384. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி
இடனறிந் துடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.
385. எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பெருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.
386. உள்ளத் துணர்வுடையான் ஓதிய நுலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.
387. கருங்கொள்ளும் செங்கொள்ளும் துணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.
388. கொடியவை கூறாதி பாண. நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை.
389. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லுரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்.
390. அரும்பவிழ் தானான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை.