தற்புரந்து எடுத்த எற்றுந்து உள்ளாள்ஊருஞ் சேரியும் ஓராங்கு அலர்எழக்
காடுங் கானமும் அவனொடு துணிந்து
நாடுந் தேயமும் நனிபல இறந்த
சிறுவன் கண்ணிக்கு ஏர்தே றுவரென 5
வாடினை- வாழியோ, வயலை!- நாள்தொறும்
பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
வினையமை வரனீர் விழுத்தொடி தத்தக்
கமஞ்சூற் பெருநிறை தயங்க முகந்துகொண்டு 10
ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework