பிறருறு விழுமம் பிறரும் நோபதம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்புகொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறுபல் குரல ஒருதூக்கு இன்னியம்
காடுகெழு நெடுவேட் பாடுகொளைக்கு ஏற்ப 5
அணங்கயர் வியன் களம் பொலியப் பையத்
தூங்குதல் புரிந்தனர் நமரென ஆங்கவற்கு
அறியக் கூறல் வேண்டும்- தோழி!-
அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம்புணை யாகச் 10
சாரல் பேரூர் முன்துறை இழிதரும்
வறனுறல் அறியாச் சோலை
விறன்மலை நாடன் சொல்நயந் தோயே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework