இலங்குசுடர் மண்டிலம் புலந்தலைப் பெயர்ந்துபல்கதிர் மழுகிய கல்சேர் அமையத்து
அலந்தலை மூதேறு ஆண்குரல் விளிப்ப
மனைவளர் நொச்சி மாசேர்பு வதிய
முனையுழை இருந்த அம்குடிச் சீறூர்க் 5
கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்
மிகுபதம் நிறைந்த தொகுகூட்டு ஒருசிறைக்
குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன்நசைப் பிணவின் உயங்குபசி களைஇயர்
தளிர்புரை கொடிற்றின் செறிமயிர் எருத்திற் 10
கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்றம்ம-
நல்லக வனமுலை அடையப் புல்லுதொறும்
உயிர்குழைப் பன்ன சாயற்
செயிர்தீர் இன்துணைப் புணர்ந்திசி னோர்க்கே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework