தாழ்சினை மருதம் தகைபெறக் கவினியநீர்சூழ் வியன்களம் பொலியப் போர்ப்பஅழித்து
கள்ளார் களமர் பகடுதலை மாற்றி
கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின் 5
இருநீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர்
தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலின் சினைஇக்
கழனி உழவரொடு மாறுஎதிர்ந்து மயங்கி
இருஞ்சேற்று அள்ளல் எறிசெருக் கண்டு
நரைமூ தாளர் கைபிணி விடுத்து 10
நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன
நலம்பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு
மணங்கமழ் தண்பொழில் அல்கி நெருநை
நீதற் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணளெம் அணங்கன் னானே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework