கழியே சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்பஎறிதிரை ஓதம் தரல்ஆ னாதே
துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர்அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே; 5
கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச்
சேந்தனை சென்மோ- பெருநீர்ச் சேர்ப்ப!-
இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி 10
வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework