அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கைவரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய
எவன்ஆய்ந் தனர்கொல்- தோழி! ஞெமன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே 5
உரன்மலி உள்ளமொடு முனைபா ழாக
அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு
எழிற் குன்றத்துக் கவாஅன் கேழ்கொளத்
திருந்துஅரை நிவந்த கருங்கால் வேங்கை 10
எரிமருள் கவளம் மாந்திக் களிறுதன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்லூர் பாம்பின் தோன்றும்
சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework