குணகடல் முகந்த கொள்ளை வானம்பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி, வலன்ஏர்பு
கோல்நிமிர் கொடியின் வசிபட மின்னி,
உரும்உரறு அதிர்குரல் தலைஇப், பானாள், 5
பெருமலை மீமிசை முற்றின ஆயின்,
வாள்இலங்கு அருவி தாஅய், நாளை
இருவெதிர் அம்கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ, வண்பரி உந்தி,
நனிபெரும் பரப்பின் நம்ஊர் முன்துறைப், 10
பனிபொரு மழைக்கண் சிவந்த, பானாள்
முனிபடர் அகல மூழ்குவம் கொல்லோ!
மணிமருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவுஅருந் துயரம் செய்தோன்
அணிகிளர் நெடுவரை ஆடிய நீரே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework