தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றி,வயங்குகதிர் விரிந்த, உருகெழு மண்டிலம்
கயம்கண் வறப்பப் பாஅய், நல்நிலம்
பயம்கெடத் திருகிய பைதுஅறு காலை,
வேறுபல் கவலைய வெருவரு வியன்காட்டு, 5
ஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார்
வில்வல் ஆடவர் மேலான் ஒற்றி,
நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென் ஆயின், அன்னோ! 10
ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க,
இனிதினிற் புணர்க்குவென் மன்னே - துனிஇன்று
திருநுதல் பொலிந்தவென் பேதை
வருமுலை முற்றத்து ஏமுறு துயிலே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework