எரியகைந் தன்ன தாமரை இடைஇடை
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
எரியகைந் தன்ன தாமரை இடைஇடைஅரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
கட்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்,
ஆய்கடும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
பெரிய நாண்இலை மதுறைப் பொலிய, ஒள்நுதல்,
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்
மாழை நோக்கின், காழ்இயன் வனமுலை,
எஃகுடை எழில்நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, 10
பொய்புறம் பொதிந்துயாம் கரப்பவும் கையிகந்து
அலர்ஆ கின்றால் தானே; மலர் தார்,
மையணி யானை, மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன்இயைந்து எழுந்த இருபெரு வேந்தர் 15
கடன்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழியப், பரந்துஅவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடுகொள் வியன்களத்து ஆர்ப்பினும் பெரிதே!