அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்பழிஇலர் ஆயினும், பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர், வெஞ்சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன் 5
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய்இல ராக, நம் காதலர் - வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின்முன் பரித்துஇடூஉப் பழிச்சிய
வள்உயிர் வணர்மருப்பு அன்ன, ஒள்இணர்ச் 10
சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடைப்,
பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை,
சினம்மிகு முன்பின், வாமான், அஞ்சி
இனம்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை 15
நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
நம்நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடா மையின், நீடி யோரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework