கேளாய் எல்ல! தோழி! வேலன்வெறிஅயர் களத்துச் சிறுபல தாஅய
விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்,
உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
அரவுநுங்கு மதியின், ஐயென மறையும் 5
சிறுபுன் மாலையும் உள்ளார், அவர்என
நம்புலந்து உறையும் எவ்வம், நீங்க
நூல்அறி வலவ! கடவுமதி, உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை,
யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர் 10
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
அருங்கடிக் காப்பின், அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்,
அரிமதர் மழைக்கண், அமைபுரை பணைத்தோள்,
அணங்குசால், அரிவையைக் காண்குவம்-
பொலம்படைக் கலிமாப் பூண்ட தேரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework