தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்கன்றுவாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்,
குடுமி நெற்றி நெடுமரச் சேவல் 5
தலைக்குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல்லெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கட்பாணி,
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்,
குன்றுசேர் கவலை, இசைக்கும் அத்தம், 10
நனிநீடு உழந்தனை மன்னே! அதனால்
உவஇனி - வாழிய, நெஞ்சே - மைஅற
வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச்
சுணங்குஅணி வனமுலை நலம்பா ராட்டித்,
தாழ்இருங் கூந்தல்நம் காதலி
நீள்அமை வனப்பின் தோளுமார் அணைந்தே!