அன்னாய்! வாழி வேண்டு அன்னை! நம் படப்பைத்தணஅயத்து அமன்ற கூதளம் குழைய,
இன்இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டி யன்ன ஒண்தளிர்ச் செயலை 5
ஓங்குசினைத் தொடுத்த ஊசல், பாம்புஎன,
முழுமுதல் துமிய உரும்எறிந் தன்றே;
பின்னும் கேட்டியோ?' எனவும், அஃது அறியாள்,
அன்னையும் கனைதுயில் மடிந்தனள்; அதன்தலை
மன்உயிர் மடிந்தன்றால் பொழுதே ; காதலர் . 10
வருவர் ஆயின், பருவம்இது' எனச்
சுடர்ந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுதுஅன் றாக,
வந்தனர் - வாழி, தோழி!- அந்தரத்து
இமிழ்பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத் 15
தவிர்வுஇல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல் பலஉடன்
வெண்கோட்டு யானை விளிபடத் துழவும்
அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக்கடு சுரனே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework