யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரிவானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறைதுறந்து எழிலி நீங்கலிற், பறைபு உடன்,
மரம்புல் லென்ற முரம்புஉயர் நனந்தலை;
அரம்போழ் நுதிய வாளி அம்பின் 5
நிரம்பா நோக்கின்; நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல்அமர்à கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் 10
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவல்இடி பதுக்கை ஆள்உகு பறந்தலை,
'உருஇல் பேஎய் ஊராத் தேரோடு 15
நிலம்படு மின்மினி போலப் பலஉடன்
இலங்கு பரல் இமைக்கும்' என்ப - நம்
நலம்துறந்து உறைநர் சென்ற ஆறே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework