அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்னநகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத்தோள்,
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன
மாஇதழ் மழைக்கண், மாஅ யோளொடு 5
பேயும் அறியா மறைஅமை புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்வு பிரிந்து இசைப்பக்,
கரந்த கரப்பொடு நாஞ்செலற்கு, அருமையின்,
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல, 10
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந் தோளே - வென்வேற்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்,
மடவது மாண்ட மாஅ யோளே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework