நோற்றோர் மன்ற தாமே கூற்றங்கோளுற விளியார், பிறர்கொள விளிந்தோர்' எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாள்இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய்உழந்து
ஆழல் வாழி, தோழி!- தாழாது, 5
உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ,
அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
நறவுநொடை நெல்லின் நாள்மகிழ் அயரும் 10
கழல்புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே - முனாஅது
முழவுஉறழ் திணிதோள் நெடுவேள் ஆவி 15
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework