பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்கொடுந்தொழின் முகந்த செங்கோல் அவ்வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து, 5
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்னஎம்
ஒண்தொடி ஞெமுக்கா தீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, 10
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினுஞ் செறிய
அருங்கடிப் படுக்குவள், அறன்இல் யாயே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework