தேர்சேண் நீக்கித் தமியன் வந்து நும்ஊர்யாது? என்ன நணிநணி ஒதுங்கி
முன்னாள் போகிய துறைவன் நெருநை
அகலிலை நாவல் உண்துறை உதிர்த்த
கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன் 5
தாழை வேர்அளை வீழ்துணைக்கு இடூஉம்
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என
நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே
உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்
நாம்எதிர் கொள்ளா மாயின் தான்அது 10
துணிகுவன் போலாம் நாணுமிக உடையன்
வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ?-
அம்ம, தோழி!- கூறுமதி நீயே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework