நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள
வங்கூழ் ஆட்டிய அம்குழை வேங்கை
நன்பொன் அன்ன நறுந்தாது உதிரக்
காமர் பீலி ஆய்மயில் தோகை 5
வேறுவேறு இனத்த வரைவாழ் வருடைக்
கோடுமுற்று இளந்தகர் பாடுவிறந்து இயல
ஆடுகள வயிரின் இனிய ஆலிப்
பசும்புற மென்சீர் ஒசிய விசும்புஉகந்து
இருங்கண் ஆடுஅமைத் தயங்க இருக்கும் 10
பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரச்
சுடர்கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குடகடல் சேரும் படர்கூர் மாலையும் 15
அனைத்தும் அடூஉநன்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி?' என்றி- தோழி!-
நீங்கா வஞ்சினம் செய்துநத் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளெனே- அவர் நாட்டு
அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய 20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந்திறல் அணங்கின் நெடும்பெருங் குன்றத்துப்
பாடின் அருவி சூடி
வான்தோய் சிமையம் தோன்ற லானே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework