சாரல் யாஅத்து உயர்சினை குழைத்தமாரி ஈர்ந்தளிர் அன்ன மேனிப்
பேர்அமர் மழைக்கண் புலம்புகொண்டு ஒழிய
ஈங்குப்பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்
அவணதாகப் பொருள் என்று உமணர் 5
கணநிரை அன்ன பல்காற் குறும்பொறைத்
தூதொய் பார்ப்பான் மடிவெள் ளோலைப்
படையுடைக் கையர் வருதிறம் நோக்கி
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன்னா குதலும் உண்டு' எனக் கொன்னே 10
தடிந்துஉடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்
கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ
வரிமரல் இயவின் ஒருநரி ஏற்றை 15
வெண்பரல் இமைக்கும் கண்பறி கவலைக்
கள்ளி நீழற் கதறுபு வதிய
மழைகண் மாறிய வெங்காட்டு ஆர்இடை
எமியம் கழிதந் தோயே- பனிஇருள்
பெருங்கலி வானம் தலைஇய
இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework