கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வீவேனில் அதிரலொடு விரைஇக், காண்வர,
சில்ஐங் கூந்தல் அழுத்தி, மெல்லிணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி, வான்கோல்
இலங்குவளை தெளிர்ப்ப வீசிச், சிலம்புநகச் 5
சிலமெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணிமாண் சிறுபுறம் காண்கம்; சிறுநனி
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
மாகொல் நோக்கமொடு மடம்கொளச் சாšெல்லேம், ஆயிடை
அருஞ்சுரத்து அல்கி யேமே- இரும்புலி
களிறுஅட்டுக் குழுமும் ஓசையும், களிபட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
வல்வாய்க் கடுந்துடிப் பாணியும் கேட்டே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework