கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்இருங்கழி இட்டுச்சுரம் நீந்தி, இரவின்
வந்தோய் மன்ற - தண்கடற் சேர்ப்ப !-
நினக்குஎவன் அரியமோ, யாமே? எந்தை
புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
பல்மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண்பன் மலரக் கவட்டுஇலை அடும்பின்
செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப
இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ, 10
மின்இலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன்
தண்நறும் பைந்தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல்வந் தீமே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework