தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்கனைபொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து
கல்லுறுத்து இயற்றிய வல்உயர்ப் படுவில்,
பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகிக், கொங்கர் 5
படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
அகல்இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர 10
வருந்தினை - வாழி என் நெஞ்சே!- இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
கொடுவில் எயினர் கோட்சுரம் படர
நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள்இடை, 15
கல்பிறங்கு அத்தம் போகி
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework