ஆய்நலம் தொலைந்த மேனியும் மாமலர்த்தகை வனப்புஇழந்த கண்ணும், வகைஇல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே; உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் 5
செய்பொருள் திறவர் ஆகிப், புல்இலைப்
பராரை நெல்லி அம்புளித் திரள்காய்
கான மடமரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் 10
பொன்புனை திகிரி திரிதர குறைத்த
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், எனையதூஉம்
நீடலர் - வாழி, தோழி! - ஆடுஇயல்
மடமயில் ஒழித்த பீலிவார்ந்து, தம்
சிலைமாண் வல்வில் சுற்றிப், பலமாண் 15
அம்புடைக் கையர் அரண்பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரின் நாறும்நின்
அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework