கேளாய் வாழியோ மகளை! நின் தோழிதிருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு-
பெருமலை இறந்தது நோவேன்; நோவல்-
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி,
முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி 5
பெரும்புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்பக்
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்.
கன்று காணாது, புன்கண்ண, செவிசாய்த்து 10
மன்றுநிறை பைதல் கூறப், பல உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ,
முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை,
மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை 15
தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்,
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல்?, எனக் கலுழும்என் நெஞ்சே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework