A Bயும் C Dயும் உள்ள தொரேடீ
பெண்ணே நல்ல தொரேடீ

இத்துனூண்டு இட்டலி விலை அரையணாவாண்டீ
ஆறு இட்டலி தின்னாக்கூட வயத்துக்குப் பத்தலடீ
(A Bயும் C Dயும்)

குட்டிக்குரா பவுடர் விலை ஏறிப்போச்சேடி
ஆகையால அரிசிமாவ அள்ளிப் பூசேண்டி
(A Bயும் C Dயும்)

சக்கரைக்கு ரே-ஷன் கார்டு கொடுத்துவிட்டாண்டீ
ஆகையால காப்பிக்குக்கூட சக்கரை பத்தலடீ
(A Bயும் C Dயும்)

அரிசிக்கு ரே-ஷன் கார்டு கொடுத்துவிட்டாண்டீ
ஆகையால விருந்தாளி வந்தால் போகச் சொல்லேண்டி
(A Bயும் C Dயும்)


 

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework