களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1

கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
கீழேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 2

மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
மேலேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 3

வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ
வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 4

தெற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
திரட்டித் திரட்டி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 5

நாட்டியக் குதிரைபோல - ஏலங்கிடி லேலோ
நாலுகாதில் ம’த’க்குதையா - ஏலங்கிடி லேலோ 6

குள்ளiமாடும் புள்ளiமாடும் - ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 7

பால்கொடுக்கிற பசுவுங்கூட - ஏலங்க’டி லேலோ
பையப்பைய மித’iக்குதையா - ஏலங்கிடி லேலோ 8

பல்லுப்போடாத காளைக்கன்றும் - ஏலங்கிடி லேலோ
பால் மறந்த கிடாக்கன்றும் -ஏலங்கிடி லேலோ 9

பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 10

எல்லாமாடும் சேர்ந்துதானும்- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா -ஏலங்கிடி லேலோ 11

கால்படவும் கதிருபூரா - ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா - ஏலங்கிடி லேலோ 12

நெல்லுவேறே வைக்கோல் வேறே- ஏலங்கிடி லேலோ
நல்லாஇருக்கு பார்க்கப்பார்க்க - ஏலங்கிடி லேலோ 13

வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் - ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா - ஏலங்கிடி லேலோ 14

ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும்- ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால் நெல்லு - ஏலங்கிடி லேலோ 15

அலங்கன் அலங்கிரெண்டுபேருக்கும் - ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக் கூலி -ஏலங்கிடி லேலோ 16

வண்டிவண்டியா நெல்லுத்தானும் -ஏலங்கிடி லேலோ
வருகுதையா அரண்மனைக்கு- ஏலங்கிடி லேலோ 17

அரண்மனைக் களஞ்சியம்பார்க்க- ஏலங்க’டி லேலோ
ஆயிரங்கண் வேணுமையா- ஏலங்க’டி லேலோ 18

புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும் - ஏலங்கிடி லேலோ
புள்ளைகளுக்கு வேகுதையா -ஏலங்கிடி லேலோ 19

வெள்ளiசெவ்வா வேளையிலே -ஏலங்கிடி லேலோ
வேகுதையா காய்கறியும்-ஏலங்கிடி லேலோ 20

கும்பல்கும்பலா நெல்லுத்தானும் - ஏலங்கிடி லேலோ
குலுமையெல்லாம் நிறைக்குதையா - ஏலங்கிடி லேலோ 21

தப்புநெல்லும் தவறுநெல்லும- ஏலங்கிடி லேலோ
தாராளமாக் கெடக்குதையா - ஏலங்கிடி லேலோ 22

கூனற்கிழவி கூடைமுறத்தை -ஏலங்கிடி லேலோ
கூனிக்கூனிக் கொண்டு போறாள் -ஏலங்கிடி லேலோ 23

கூட்டிப் பொறுக்கிக் கூடையை ரொப்பி- ஏலங்கிடி லேலோ
வீட்டுக்குப் போறா வேடிக்கையாதான் - ஏலங்கிடி லேலோ 24

சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு- ஏலங்கி’டி லேலோ 25

வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ 26
 

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework