குள்ள குள்ள வாத்து! குளத்தில் நீந்தும் வாத்து! பள்ளம் மேடு பார்த்து; பைய நடக்கும் வாத்து! வெள்ளைக் கருப்பு போன்ற வேறு வேறு வண்ணம் உள்ள போதும் கூட ஒன்றாய் செல்லும் வாத்து! பள்ளிக்கூடம் செல்லும் பாப்பாக் கூட்டம் போல மெல்ல செல்லும் நீரில் மிதக்கும் படகே வாத்து!