-
விவரங்கள்
-
தமிழர்கள்
-
தாய்ப் பிரிவு: இசை
-
குழந்தைகளுக்கான பாடல்கள்
பச்சைக்கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பெழுந்து பொங்கவே
பவள வாய் திறந்து நீ
பாடுவாயே சத்தமா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா