இந்தப் பிரிவில் கட்டுரைகள் எதுவுமில்லை. இந்தப் பக்கத்தில் உட்-பிரிவுகள் காட்டப்பட்டால், அவை கட்டுரைகளைக் கொண்டிருக்கலாம்.

உட்பிரிவுகள்

தாலாட்டுப் பாடல்கள்
தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும்.
pongalநாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும்.

இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.
மிக நெருங்கியவர்களையோ உடைமைகளையோ இழக்கும் போது ஏற்படும் சோகத்தில் பாடப்படும் பாடல்களை இழப்புப் பாடல்கள் எனலாம்.சாவை ‘இழவு’ எனும் சொல்லால் குறிப்பது உண்டல்லவா! மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு; கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி. 

தமிழில் சிறுவர் சிறுமியர் பாடி மகிழ நிறைய பாட்டுகள் உண்டு. இவை பொதுவாக வாய்வழிக் கலையுருக்களாக வளர்ந்தவையாகும். அதனாலேயே ஒரே பாடலுக்கு பல்வேறு திரிபுகள் இருக்ககூடும்.

 

பெண்கள் விளையாடுவது கல்லாங்காய் விளையாட்டு; கழங்காடல் என்றும் இதைச் சொல்வார்கள். பெதும்பைப் பருவத்துப் பெண்கள் கழங்கு விளையாடுவதாகவும் அப்போது ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணிக்கை வரும்படியான பாடல்களைப் பாடுவதாகவும் புலவர்கள் உலா என்னும் பிரபந்தத்தில் அமைத்திருக்கிறார்கள்.

 

Indian-motifs-14

நாட்டுப்புற மக்களின் பாடல்களில் மிகவும் சிறப்புடையது தெம்மாங்குப் பாடல்களாகும்.  இவற்றை மக்கள் இசையுடன் பாடி ஆடிமகிழ்வர். தென்பாங்கு என்பது தெம்மாங்கு ஆயிற்று. தேனினும் இனிய தெம்மாங்குப் பாடல்கள் தேன் பாங்காகத்  திகழும்.  இதனாலும் தேன்பாங்கு தெம்மாங்கு ஆயிற்று என்றும் கூறுவர்.

 

சிந்து என்பது நடைப்பாடல்.பயணத்தின் போதோ, பயணத்துக்கு முன்னரோ உற்சாகம் பற்றிக் கொள்வதற்காகப் பாடுவது! காவடி எடுத்துப் பயணம் போகும் போது பாடுவது காவடிச் சிந்து!

 

இன்றைக்கு 'தாண்டியா' ஆட்டம் என அழைக்கப்படும் நடனவகைத் தான் தமிழில் கோலாட்டம் என்று அழைக்கப்பட்டது. இரு கைகளிலும் கழிகளை வைத்துக் கொண்டு தாளத்திற்கேற்றாற்போல் கழிகளை மோதி சத்தம் எழுப்பியவாறே ஜோடியாக நடனமாடப்படும். கோலாட்ட கழிகள் சுமார் 15 அங்குல நீளத்தில் நுனி சிறுத்தும் அடி பெருத்தும் இருக்கும்.

 

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework