பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்
ஆனை விற்கும் வர்த்தகராம் - உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே - உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே - உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும் - கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும் கன்னாரே!
பின்னா ரேன்னு - கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ!
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework