81. அச்சம் பொ஢தால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.

82. அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.

83. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.

84. காணின் குடிப்பழியாம் கையுறின் கால்குறையும்
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால் துச்சா஡஢, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

85. செம்மையொன் றின்றிச் சிறியா ஡஢னத்தராய்க்
கொம்மை வா஢முலையாள் தோள்மாணஇ - உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

86. பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதல் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதில் மனையாளை நோக்கு.

87. அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பாணஇ
வம்பலன் பெண்மாணஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின்
தலைநக்கி யன்ன துடைத்து.

88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா
உரவோர்கண் காமநோய் ஓஓ.
கொடிதே. விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.

89. அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறம்சுடும் - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.

90. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும் - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework