நிறைசெலல் இவுளி விரைவுடன் கடைஇஅகலிரு விசும்பிற் பகல்செலச் சென்று
மழுகுசுடர் மண்டிலம் மாமலை மறைய
பொழுதுகழி மலரிற் புனையிழை! சாஅய்!
அணை அணைந்து இனையை ஆகல்- கணையரைப் 5
புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்
கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்ப
பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த
கொலைவெங் கொள்கைக் கொடுந்தொழின் மறவர் 10
ஆறுசெல் மாக்கள் அருநிறத்து எறிந்த
எஃகுஉறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய
வளைவாய்ப் பருந்தின் வள்ளுகிர்ச் சேவல்
கிளைதரு தெள்விளி கெழுமுடைப் பயிரும்
இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய 15
செய்வினை வலத்தர் ஆகி இவணயந்து
எய்தவந் தனரே!- தோழி!- மையெழில்
துணையேர் எதிர்மலர் உண்கண்
பிணையேர் நோக்கம் பெருங்கவின் கொளவே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework