முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை
நீர்நசை மருங்கின் நிறம்பார்த்து ஒடுங்கிய
பொருமுரண் உழுவை தொலைச்சிக் கூர்நுனைக்
குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅக் 5
கன்முகை அடுக்கத்து மென்மெல இயலிச்
செறுபகை வாட்டிய செம்மலொடு அறுகால்
யாழிசைப் பறவை இமிரப் பிடிபுணர்ந்து
வாழையம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின்புரைத் தக்க சாயலன் எனநீ 10
அன்புரைத் தடங்கக் கூறிய இன்சொல்
வாய்த்தன- வாழி, தோழி!- வேட்டோ ர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமும்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework