இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்செய்வோர் ஏச்சொல் வாடக் காதலர்
வருவர் என்பது வாய்வ தாக
ஐய செய்ய மதனில சிறியநின்
அடிநிலன் உறுதல் அஞ்சிப் பையத் 5
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலிக்
காணிய வம்மோ?- கற்புமேம் படுவி!-
பலவுப்பல தடைஇய வேய்பயில் அடுக்கத்து
யானைச் செல்லினம் கடுப்ப வானத்து
வயங்குகதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின் 10
பைபட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு
ஆலி அழிதுளி தலைஇக்
கால்வீழ்த் தன்றுநின் கதுப்புறழ் புயலே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework