துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கைஅரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து 5
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த தெரிஇழை நெகிழ்தோள்
ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ 10
புலத்தல் ஒல்லுமோ?- மனைகெழு மடந்தை
அதுபுலந்து உறைதல் வல்லி யோரே
செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்
தாமட்டு உண்டு தமியர் ஆகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப 15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்மவஃது உடலு மோரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework