மழையில் வானம் மீன்அணிந் தன்ன
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
மழையில் வானம் மீன்அணிந் தன்னகுழையமல் முசுண்டை வாலிய மலர,
வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப்
பெரிய துடிய கவர்கோற் கோவலர்,
எல்லுப்பெயல் உழந்த பல்லான் நிரையொடு, 5
நீர்திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர;
நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து,
ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப்,
பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக்,
கூதிர்நின் றன்றால்; பொழுதே! காதலா 10
நம்நிலை அறியார் ஆயினும், தம்நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே- ஓங்குநடைக்
காய்சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே?