நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
துன்னலம் மாதோ எனினும், அஃது ஒல்லாய்-
தண்மழை தவழும் தாழ்நீர் நனந்தலைக் 5
கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து
மாய இருள்அளை மாய்கல் போல,
மாய்கதில்- வாழிய, நெஞ்சே!- நாளும்,
மெல்இயர் குறுமகள் நல்அகம் நசைஇ,
அரவுஇயல் தேரும் அஞ்சுவரு சிறுநெறி, 10
இரவின் எய்தியும் பெறாஅய், அருள்வரப்
புல்லென் கண்ணை புலம்புகொண்டு, உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெருநகை யாக;
காமம் கைம்மிக உறுதர,
ஆனா அரும்படர் தலைத்தந் தோயே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework